தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஸ்டாலினுக்கு பன்வாரிலால் புரோகித் அழைப்பு

DMK Government M.K.Stalin 2 700x375 1
DMK Government M.K.Stalin 2 700x375 1

தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்று ஆட்சியமைப்பதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதிகாரபூர்வமாக அழைத்துள்ளார்.

இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளமை குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை நேற்று (05) மாலை அறிக்கை வெளியிட்டது.

இதன்படி, சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில், எதிர்வரும் ஏழாம் திகதி வெள்ளிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு பதவியேற்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில், முதல்வராக மு.க.ஸ்டாலினும் அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது