அணு ஆயுத பேச்சுவார்த்தை காலக்கெடு விதிக்கவில்லை

teephan
teephan

அணுஆயுதங்களை முற்றிலுமாக கைவிடுவது தொடர்பாக அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை நடத்த போவதில்லை என்று வடகொரியா அண்மையில் அதிரடியாக அறிவித்தது.

இதனையடுத்து வடகொரியா அனுவாயுத சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீபன் பீகன், கொரிய தீபகற்ப அமைதி மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான தென்கொரிய சிறப்பு தூதருடனான சந்திப்பினையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

அணு ஆயுத பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா காலக்கெடு விதிக்கவில்லை. சிங்கப்பூரில் நடைபெற்ற உச்சி மாநாட்டின் போது இரு தலைவர்களும் செய்த கடமைகளை நிறைவேற்றுவதற்கான இலக்கு எங்களிடம் உள்ளது என தெரிவித்தார்.