நித்தியானந்தாவை கண்டுபிடிப்பதற்கான காலக்கெடு நிறைவு

niththi 1
niththi 1

கைலாசா நாட்டில் குடியுரிமை கோரி உலகெங்கிலும் இருந்து 40 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் சமூக வலைத்தளங்களினூடாக இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இந்த அறிவிப்பை அடுத்து கைலாசாவை அமைத்தே தீருவேன் என நித்தியானந்தா சூளுரைத்துள்ளார்.

2003-ம் ஆண்டு முதல் நான் சந்திக்காத குற்றப்பிரிவுகளே இல்லை. என் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் நான் நிரபராதி என நிரூபித்துள்னேன். ஆன்மீகத்துறையில் நான் என்றைக்கோ தலைவனாகிவிட்டேன் என வீடியோவின் மூலம் தெரிவித்தார்.

நித்தியானந்தாவை கண்டுபிடிப்பதற்கு கர்ணாடகா உச்ச நீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடு இன்றுடன் நிறைவடையவுள்ளது.

நித்யானந்தா சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வரும் வீடியோக்களை ஆய்வு செய்த பொலிஸார் நித்யானந்தா அமெரிக்காவில் உள்ள ஒரு தீவில் பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

அவரை கைது செய்ய பொலிஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.