இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குவியும் வாழ்த்துக்கள்

chandrayan 2
chandrayan 2

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் சமூக வலைதளங்களில் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சந்திரயான் – 2 விண்கலத்தின், லேண்டர் சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து, சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் எதுவும் உடனடியாகத் தெரியவில்லை. இதனை இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வமாக அறிவித்தார். விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிரங்கவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள் என பலரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

அமிதாப் பச்சன்: எங்கள் பெருமை, எங்கள் வெற்றி. இஸ்ரோவை நினைத்து பெருமை கொள்கிறோம்.

ஷாரூக் கான்: சில நேரங்களில் நாம் வேண்டிய இலக்கை அடைவதில்லை. இதில் முக்கியமானது என்னவென்றால் நம்மால் முடியும் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். நமது தற்போதைய நிலைமை முடிவு அல்ல. நம்புங்கள்.

அக்‌ஷய் குமார்: சோதனை இல்லாமால் அறிவியல் இல்லை. சிலவற்றில் நாம் வெற்றி பெறுவோம். சிலவற்றில் நாம் கற்றுக் கொள்வோம். நாம் மீண்டு வருவோம். இதன் பின்னணியில் உள்ளவர்களுக்கு சல்யூட். விரைவில் சந்திரயான் 2, சந்திரயான் 3க்கான வழியை ஏற்படுத்தும்.

இவர்கள் மட்டுமல்லாது லதா மங்கேஷ்கர், சன்னி தியோல் ஆகியோரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்

சந்திரயான்-2 விண்கலம் மொத்தம் 3,850 கிலோ எடை கொண்டது. இதில், தொடர்ந்து நிலவைச் சுற்றி வரக்கூடிய ‘ஆர்பிட்டர்’, நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் ‘விக்ரம்’ என்ற லேண்டர் கலம், நிலவில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்யக்கூடிய ‘பிரக்யான்’ என்ற ரோவர் வாகனம் என 3 அதிநவீன
சாதனங்கள் உள்ளன.