இந்தியாவிற்கு போதிய தடுப்பூசிகளை வழங்குமாறு ஸ்டாலின் கோரிக்கை

201911071944142708 Stalin dissuades supporters from making vitriolic comments SECVPF
201911071944142708 Stalin dissuades supporters from making vitriolic comments SECVPF

தமிழகத்திற்கு போதிய தடுப்பூசிகளை வழங்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தனுக்கு அவர் எழுதியுள்ள கடித்தில் மேற்படி தெரிவித்துள்ளார்.

குறித்த கடித்தில் மேலும் தெரிவித்துள்ள அவர், ‘மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு போதிய தடுப்பூசிகள் வரவில்லை. மத்திய அரசு மூலம் இதுவரை 25.84 இலட்சம் தடுப்பூசியும், பிற வழிகள் மூலம் 16.74 இலட்சம் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுமூலமும், பிற வழிகள் மூலமும் தலா 50 இலட்சம் தடுப்பூசிகளை வழங்க வேண்டும். தமிழக மக்கள் தொகை மற்றும் கொவிட் பாதிப்புகளுக்கு ஏற்ப தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.