புர்கினா பாசோவில் ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 132 பேர் பலி!

1622944987 4111128 hirunews
1622944987 4111128 hirunews

புர்கினா பாசோவின் வடக்கு பகுதியில் நேற்றிரவு ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 132 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த சில ஆண்டுகளில் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் இதுவென அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது

குறித்த பகுதியிலுள்ள உள்ளூர் சந்தைகள் மற்றும் வீடுகள் என்பன எரிக்கப்பட்டுள்ளன.

எந்த ஒரு அமைப்பும் இந்தத் தாக்குதலுக்கு இதுவரையில் உரிமை கோரவில்லை.

புர்கினா பாசோவின் எல்லை பகுதிகளில் கடந்த சில நாட்களாக வன்முறைகள் அதிகரித்துள்ளன.

இவ்வாறான செயற்பாடுகளை எதிர்ப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் அந்த நாட்டு ஜனாதிபதி ரோச் கபோர் அறிவித்துள்ளார்.

அத்துடன், புர்கினா பாசோவில் மூன்று நாட்கள் தேசிய துக்க தினம் அனுஷ்ட்டிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடேரெஸ் தீவிரவாதத்திற்கு எதிரான சர்வதேச நாடுகளின் ஆதரவு இரட்டிப்பாக வேண்டும் என கூறியுள்ளார்.