பாகிஸ்தானில் ரயில்கள் விபத்து! 36 பேர் உயிரிழப்பு!

730257 3425631 PM Imran updates
730257 3425631 PM Imran updates

பாகிஸ்தானில் பயணிகள் ரயில்கள் இரண்டும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டதில் இடம்பெற்ற விபத்து குறித்து அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இன்று (திங்கட்கிழமை) சயித் எக்ஸ்பிரஸ், மிலத் எக்ஸ்பிரஸ் ஆகிய பயணிகள் ரயில்கள் இரண்டும் தடம் புரண்டு ஒன்றோடொன்று மோதிக் கொண்டதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே, விபத்து குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில் ஏற்பட்ட மோசமான ரயில் விபத்தாக இது கருதப்படுவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானில் 2005 ஆம் ஆண்டு சிந்து மாகாணத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.