இந்தியாவில் மீண்டும் சிறுத்தை இனம் அறிமுகம்!

224295
224295

இந்தியாவில் முற்றாக அழிந்துவிட்ட விலங்கினமான சிறுத்தைகள், மீண்டும் அங்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்காக தென்னாப்பிரிக்காவில் இருந்து 3 பெண் சிறுத்தைகள் உள்ளிட்ட ஐந்து சிறுத்தைகள் இந்தியாவிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தியாவில் சிறுத்தை இனங்கள் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்திய வனவளத்துறையின் முயற்சிகளின் ஊடாக சிறுத்தைகள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இந்தியாவில் உருவாக்கப்பட்டு, மீண்டும் சிறுத்தைகளை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.