பெண்ணின் உடலில் 32 முறை உருமாறிய கொரோனா!

coronavirus y la crisis financiera 1024x346 1
coronavirus y la crisis financiera 1024x346 1

தென் ஆபிரிக்காவில், எச்.ஐ.வி (HIV) நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில், கொரோனா 32 முறை உருமாறியுள்ளதாக ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனர்.

தென் ஆபிரிக்காவில் எச்.ஐ.வி (HIV) நோயால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 36 வயது பெண்ணுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

2006 ஆம் ஆண்டு முதல் எச்.ஐ.வி (HIV) நோயால் பாதிக்கப்பட்டுள்ள குறித்த பெண்ணுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாகக் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான அவரின் உடலில், 216 நாட்களாக கொரோனா வைரஸ், 32 வகைகளாக உருமாறியுள்ளது.

அதில் பிரிட்டன், தென் ஆபிரிக்கா வகைகளும் அடங்குகின்றன என ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், எச்.ஐ.வி (HIV), புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாகவே இருக்கும்.

இதுபோன்ற நபர்கள் கொரோனா தொற்றால் பீடிக்கப்படும் போது, அதன் பாதிப்பு தீவிரமாக காணப்படும்.

இவர்கள் கொவிட் தொற்றிலிருந்து குணமடைவதற்கு நீண்ட நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது.

சாதாரண நபரை விட, இவர்களுக்கு கொவிட் தொற்றுறுதியாகும் போது, உயிரிழப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்