பூனேயில் இரசாயன தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீயில் 18 பேர் பலி!

download 4 1
download 4 1

இந்தியாவின் மஹராஷ்டிரா மாநிலத்தின் பூனே பகுதியில் உள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 18 பேர் பலியாகினர்.

அத்துடன் மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் மரணித்தவர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.

தீயை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு 6 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

தீப்பரவல் ஏற்பட்ட கட்டிடத்தில் இருந்து பலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த தொழிற்சாலையில் பொலித்தீன் உற்பத்தி செய்யும் பிரிவிலேயே இந்த தீப்பரவல் ஆரம்பித்ததாக தெரிய வந்துள்ளது.