பாகிஸ்தான் தொடருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு!

taiwan train accident
taiwan train accident

பாகிஸ்தான் – சிந்த் பகுதியில் இரண்டு தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு நேற்று விபத்துக்குள்ளாகின.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 62 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், இந்த விபத்தில் 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான தொடருந்துகளை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் தொடருந்துகளின் சிதைவுகளுக்குள் சிக்கியிருந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.