ஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல்

1 falmouthjpeg 1
1 falmouthjpeg 1

ஜி 7 மாநாடு நடத்தப்படும் ஹோட்டல் ஒன்றில் வெடிகுண்டு அச்சுறுத்தல் வெளியான பின்னர் சுமார் 100 விருந்தினர்கள் மற்றும் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஜி 7 உச்சிமாடு ஆரம்பமாவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த சம்பவம் நடந்துள்ளது.

இங்கிலாந்தின் கார்விஸ் விரிகுடாவிலிருந்து 27 மைல் தொலைவில் உள்ள பால்மவுத் என்ற ஹோட்டலுக்கு வெளியே உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 3:15 மணியளவில் பொதியொன்றிலிருந்து சந்கேத்திற்கிடமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த ஹோட்டலில் தான் ஜி 7 மாநாட்டிற்காக யூன் 11 வெள்ளிக்கிழமை முதல் உலகத் தலைவர்கள் சந்திப்பினை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.

அதன் பின்னர் ஹோட்டலிலிருந்து ஊழியர்களும், விருந்தினர்களும் வெளியேற்றப்பட்டதுடன், கார்பிஸ் விரிகுடாவின் உச்சி மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றி 11,000 காவல்துறை அதிகாரிகளும் இராணுவ வீரர்களும் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கியுள்ளனர்.

அது மாத்திரமன்றி இது தொடர்பான குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை தொடங்கும் ஜி 7 உச்சி மாநாடு உலகின் மிக சக்திவாய்ந்த ஜனநாயக தலைவர்களை ஒன்றிணைக்கும்.

மாநாட்டில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையிலான முதல் சந்திப்பு நடைபெறும்.

குழுவின் மற்ற உறுப்பினர்களில் கனடா, ஜப்பான், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகியவை அடங்கும்.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலகளாவிய ரீதியில் தடுப்பூசி போடுவதை ஆதரிப்பதன் மூலம் கொரோனா வைரஸை தோற்கடிக்க உறுப்பினர்களை ஊக்குவிக்க போரிஸ் ஜோன்சன் இந்த மாநாட்டை பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.