மியன்மார் விமான விபத்தில் 12 பேர் பலி!

download 1 11
download 1 11

மியன்மார் இராணுவத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று மண்டலே பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விபத்தில் உயிர்த்தப்பிய விமானியும், பயணி ஒருவரும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விமானம், மியன்மார் தலைநகர் நைபிடோவிலிருந்து பைன் ஓ லுவின் நகருக்குப் பயணித்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மடாலயம் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டும் விழாவுக்காக இரு தேரர்கள், 6 பக்தர்கள் மற்றும் 6 இராணுவ சிப்பாய்களுடன் இந்த விமான பைன் ஓ லுவின்ஸ் நகருக்குப் பயணித்துள்ளது.

இந்த விமானம், பைன் ஓ லுவினிலுள்ள அனிஸாகான் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

அவ்வேளையில் அங்கு சீரற்ற வானிலை நிலவியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.