கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,016பேர் பாதிப்பு

202104290412159145 Is Corona Virus Infection Highly Heart and Diabetic SECVPF
202104290412159145 Is Corona Virus Infection Highly Heart and Diabetic SECVPF

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 016பேர் பாதிக்கப்பட்டதோடு 11பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து ஏழாயிரத்து 269பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 023பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 12ஆயிரத்து 797பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 567பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 13இலட்சத்து 68ஆயிரத்து 449பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.