ஈரான் தேர்தலில் பிரதம நீதியரசர் இப்ராஹிம் ரய்சி வெற்றி

118987557 gettyimages 1233522792
118987557 gettyimages 1233522792

ஈரானில் ஜனாதிபதி தேர்தலில் பிரதம நீதியரசர் இப்ராஹிம் ரய்சி வெற்றி பெற்றுள்ளார்.

ஈரானில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இடையூறுகள் இன்றி நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிலையில், இப்ராஹிம் ரய்சி ஈரானில் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்பார்.

இவர் மிக உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டவர் என்றும், அதனால் இவர் ஜனாதிபதியானால் சர்வதேச அணுசக்தி ஒப்பந்தம் போன்ற விவகாரங்களில் பின்னடைவு ஏற்படும் என்று அஞ்சப் படுகின்றது.

ஈரானின் தற்போதைய ஜனாதிபதி ரௌஹானியின் பதவிக் காலம் நிறைவடைந்து விட்டதால் அவர் இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தனக்கு ஆதரவாக வடிவமைக்கப்பட்டதாக பரவலாகக் காணப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில், ஈரானியர்களின் ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

60 வயதான மதபோதகரான இப்ராஹிம் ரய்சி தனது தொழில் வாழ்க்கையின் பெரும்பகுதியை ஒரு வழக்கறிஞராக பணியாற்றி கழித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஹசன் ரூஹானியிடம் போட்டியிட்டு தோல்வியடைந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2019 ஆம் ஆண்டில் அவர் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டார்.