கொரோனாவால் உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு இல்லை -இந்திய அரசு

86560
86560

கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு 400,000 ரூபா இழப்பீட்டை வழங்க முடியாது என இந்திய மத்திய அரசாங்கம் உயர்நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

இழப்பீடு வழங்கலானது, இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மாத்திரமே பொருந்தும் என்றும் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொவிட்-19 தொற்றினால் மரணிப்போரின் குடும்பங்களுக்கு 4 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்குமாறுகோரி, இந்திய உயர்நீதிமன்றில் அண்மையில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொவிட்-19 இழப்பீடு மற்றும் மரண சான்றிதழ் குறித்து, மத்திய அரசின் கொள்கையை விளக்குமாறு உயர்நீதிமன்றம் வினவியிருந்தது.

இதற்கமைய உயர்நீதிமன்றில் நேற்று சமர்ப்பித்த 183 பக்கங்களைக் கொண்ட ஆவணத்தில், மத்திய அரசாங்கம் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 மரணங்களுக்கு இழப்பீடு வழங்கிவிட்டு பிற நோய்களுக்கு மறுப்பது நியாயமற்றது என்றும் இந்திய மத்திய அரசாங்கம் குறித்த ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது.

385,000க்கும் அதிகமான கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது.

இதேநேரம் பல மாநிலங்கள் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளன.

இந்நிலையில் அனைவருக்கும் பணம் செலுத்த முடியாது என்று இந்திய மத்திய அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.