100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

1624243548 china 2
1624243548 china 2

சீனாவில் இதுவரை பொதுமக்களுக்கு 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

எனினும், உலகின் பிற நாடுகளைப் போல் அங்கும் இரண்டு தவணைகளாக கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும் நிலையில், எத்தனை பேருக்கு இதுவரை முழுமையாக அந்தத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்ற விவரத்தை ஆணையம் வெளியிடவில்லை.

சீனாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் மிக மெதுவாகத் தொடங்கிய தடுப்பூசி திட்டம், தற்போது விறுவிறுப்படைந்துள்ளது. கடந்த மாதம் வரை அங்கு செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 50 கோடியாக இருந்தது. அந்த எண்ணிக்கை குறுகிய காலத்தில் தற்போது இரட்டிப்பாகியுள்ளது.