சுவீடன் பிரதமருக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை நிறைவேறியது!

download 1 32
download 1 32

சுவீடன் பிரதமர் ஸ்டெபன் லொஃபனுக்கு (Stefan Lofven) எதிராக அந்த நாட்டு நாடாளுமன்றம் நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றியுள்ளது.

புதிதாக அமைக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வாடகை அறவீடுகள் குறித்த சர்ச்சையை அடுத்து, இடதுசாரி கட்சி, கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளது.

இதையடுத்து, பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் உள்ள 349 உறுப்பினர்களுள், 181 பேர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இந்நிலையில், சமூக ஜனநாயக கட்சித் தலைவரான பிரதமர் ஸ்டெபன் லொஃபன், ஒரு வாரத்திற்குள் பதவி விலக வேண்டும் அல்லது தேர்தலொன்றுக்கான அழைப்பை விடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவீடனில் நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் பிரதமர் ஒருவர் பதவி நீக்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்நிலையில், பிரதமர் பதவி விலக தீர்மானித்தால், புதிய அரசாங்கத்தை அமைக்க, சபாநாயகர் குறுக்கு கட்சி பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.