கோவெக்சின் தடுப்பூசியை பயன்படுத்த அங்கீகாரம் கோரும் பாரத் பயோன்டெக் நிறுவனம்

vikatan 2021 05 6b49fcc4 6dc3 443e 9a4a 73a6717d6140 covishield covaxin
vikatan 2021 05 6b49fcc4 6dc3 443e 9a4a 73a6717d6140 covishield covaxin

பாரத் பயோன்டெக் நிறுவன தயாரிப்பான கோவெக்சின் தடுப்பூசி 77.8 சதவீத செயல்திறன் கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனது மூன்றாவது கட்ட பரிசோதனை அறிக்கையை மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் அந்நிறுவனம் சமர்ப்பித்துள்ளது.

எனினும் கோவெக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் இன்னும் அங்கீகாரம் அளிக்கவில்லை.

அவசரகால பயன்பாட்டிற்கு அங்கீகாரமளிக்க வேண்டும் என பாரத் பயோன்டெக் நிறுவனம் தங்களது 90 சதவீத ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது.

இந்நிலையில் ஒப்புதலுக்கு முந்தைய இறுதி ஆவணங்களை சமர்ப்பிக்கும் கூட்டம் நாளைய தினம் நடைபெறவுள்ளது.

இதனால் விரைவில் கோவெக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.