ஆப்கானிஸ்தானுக்கு ஐ.நா.சபை எச்சரிக்கை!

1624416463 2117408 hirunews
1624416463 2117408 hirunews

ஆப்கானிஸ்தானில் இருந்து தமது துருப்புக்களை மீளப் பெறுவதற்கு வெளிநாடுகள் நடவடிக்கை எடுக்கின்ற நிலையில் தலிபான்கள் பல மாவட்டங்களை கைப்பற்றியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

தலிபான்கள் கடந்த மே மாதத்தில் இருந்து 370 மாவட்டங்களில் 50 மாவட்டங்களை கைப்பற்றியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறப்பு தூதுவர் டெபோரா லியோன்ஸ் பாதுகாப்பு சபையில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு மோதல்கள் அதிகரிக்கின்றமையால் பல நாடுகளுக்கு பாதுகாப்பு இல்லாத தன்மை அதிகரித்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதிக்கு முன்னர் தமது துருப்புக்களை மீளப் பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளன.

இதற்கிடையில், ஊடகங்களுக்கு கருத்துரைத்த பென்டகனின் பேச்சாளர், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கத் துருப்பினரை மீளழைக்கும் செயற்பாடுகளை அமெரிக்கா துரிதப்படுத்தாது என அறிவித்திருந்தார்.

அத்துடன், ஆப்கானிஸ்தானில் அண்மைக்காலமாக தலிபானியர்கள் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்துள்ளனர்.

எனவே, அங்கு காணப்பட்ட நிலைமையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றும் பென்டகன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.