முதல் முறையாக மெக்ஸிகோ எல்லைக்கு பயணமாகும் கமலா ஹரிஸ்!

United States senator Democratic presidential candidate Kamala Harris April 2019
United States senator Democratic presidential candidate Kamala Harris April 2019

அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரிஸ், முதல் முறையாக மெக்ஸிகோ எல்லைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அமெரிக்க – மெக்ஸிகோ எல்லையை அடையும் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

கடந்த மார்ச் மாதம் வெள்ளை மாளிகையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றதன் பின்னர், இடம்பெயர்வுக்கான மூல காரணங்களை நிவர்த்தி செய்வதற்காக ஏன் எல்லைக்கு செல்லவில்லை என்ற கேள்விகளை உப ஜனாதிபதி கமலா ஹரிஸ் எதிர்கொண்டிருந்தார்.

இந்நிலையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை அவர் மெக்ஸிகோ எல்லைக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப், எதிர்வரும் 30 ஆம் திகதி மெக்ஸிகோ எல்லைக்கு செல்ல உள்ளதாக அறிவித்து ஒரு வாரத்தின் பின்னர், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.