அமெரிக்க வெளியுறவு செயலாளர் இந்தியா விஜயம்!

202007180407387107 The time has come for the world to respond to Chinas SECVPF
202007180407387107 The time has come for the world to respond to Chinas SECVPF

அமெரிக்க வெளியுறவு செயலாளர் அன்டனி பிளிங்கன் அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அமெரிக்க இராஜாங்க அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 28 ஆம் திகதி டெல்லி செல்லவுள்ள அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

இதன்போது, இந்தோ-பசிபிக் கூட்டுறவு, பிராந்திய பாதுகாப்பு விடயங்கள், ஜனநாயக மதிப்பீடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

மேலும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் கவனம் செலுத்துவார் என இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.