ஆப்கானிஸ்தானில் இரவு நேர ஊரடங்கு சட்டம்!

202107250015142005 Night curfew enforced in Afghanistan Government action to SECVPF 1
202107250015142005 Night curfew enforced in Afghanistan Government action to SECVPF 1

ஆப்கானிஸ்தானிய அரசாங்கம் நேற்று முதல் தொடர்ச்சியான இரவு நேர ஊரடங்கு சட்டத்தை 39 மாகாணங்களில் பிரகடனப்படுத்தியுள்ளது.

தாலிபான்கள் தொடர்ந்து பல பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நோக்கில் செயற்படுவதால், அவர்களை தடுக்கும் நோக்கில் இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தலைமையில் சர்வதேச படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், தாலிபான்களின் செயற்பாடுகள் கடந்த இரண்டு மாதங்களாக அதிகரித்துள்ளன.

ஆப்கானிஸ்தானின் நிலப்பரப்பில் 50 சதவீதமானவை தற்போது தாலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

20 வருடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த தாலிபான்கள் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பையடுத்து அங்கிருந்து முற்றாக வெளியேற்றப்பட்டிருந்தனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள முக்கிய நகரங்களில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்ற போதிலும், முற்றாக நகரங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கந்தகார் மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாக கடும் சமர் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.