சீனாவின் கோடீஸ்வரர் ‘சன் டாவுக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

gettyimages 1331038620 90f046c60bdf9e5b6c4fd897ca950b84e2af9d1b s1200
gettyimages 1331038620 90f046c60bdf9e5b6c4fd897ca950b84e2af9d1b s1200

மனித உரிமைகள் சார்ந்த கருத்துக்களை வெளியிட்டு வந்த சீனாவின் கோடீஸ்வரர் ‘சன் டாவுக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வடக்கு அபெய் மாகாணத்தின் புகழ்பெற்ற விவசாயத்துறை கோடீஸ்வரரான அவர், மனித உரிமைகள், அரசியல் போன்ற விடயங்களில் வெளிப்படையாக தமது கருத்துக்களைத் தெரிவித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் ‘சர்ச்சைகளைத் தெரிவு செய்து குழப்பங்களை விளைவிப்பதாகக்’ குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றம் ஊடாக அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு 18 ஆண்டுக்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.