அமெரிக்காவினால் இந்தியாவுக்கு 25 மில்லியன் டொலர் நிதியுதவி!

1627547496 6980388 hirunews
1627547496 6980388 hirunews

இந்தியாவின் கொவிட்-19 தடுப்பூசி செயற்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவற்காக 25 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளின்டன் இதனை தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவிற்கு இதுவரை 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியாக வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிதியுதவியானது தடுப்பூசி விநியோகத்தை வலுப்படுத்தல், மக்களுக்கு ஊட்டச்சத்து அளித்தல், சுகாதார சேவையாளர்களுக்கு பயிற்சி வழங்கல் போன்ற செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.