ஆப்கானிஸ்தானில் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் மீது தாக்குதல் :ஒருவர் பலி!

images
images

ஆப்கானிஸ்தானின் ஹெராட்டில் இயங்கும், ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் மீது தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் இந்த தாக்குதலில் ஏனைய அதிகாரிகள் சிலரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதியுடன் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க துருப்பினர்கள் அனைவரும் வெளியேறுவார்கள் என அமெரிக்கா அறிவித்ததன் பின்னர் ஆப்கானிஸ்தானில் மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முற்றாக கைப்பற்றுவதை தடுக்கும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தற்போது இராஜதந்திர நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொண்டுவருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.