சீனாவில் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

d8cb8a51464717c0f64001
d8cb8a51464717c0f64001

சீனாவில் கொவிட் 19 தொற்று பரவல் மீண்டும் அதிகரித்ததையடுத்து பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை அந்த நாட்டு அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் சீனாவில் 71 புதிய நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இது சீனாவில் கொவிட் 19 முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதன் பின்னர் நாளொன்றில் பதிவான அதிக எண்ணிக்கையாகும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட குறைந்த வயதினரையும் இலக்கு வைத்து தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை சீனா ஆரம்பித்துள்ளது.

இதுவரையில் சீனாவில் தடுப்பூசி வழங்கப்பட்டவர்களின் மொத்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.

எனினும் இதுவரையில் 1.6 பில்லியனுக்கும் அதிகமானோருக்கு சீனாவில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சீனா இந்த வருட இறுதிக்குள் அதன் சனத்தொகையில் 80 முதல் 85 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் இலக்கினை கொண்டு செயற்படுவதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.