ஹேய்ட்டியில் நிலநடுக்கம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் தாமதம்!

1628990520 986911 hirunews
1628990520 986911 hirunews

ஹேய்ட்டியில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகள் தாமதடைந்துள்ளமையினால் அங்கு பதற்ற நிலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 2,200க்கும் மேற்பட்டோர் பலியானதோடு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

உதவி பொருட்களை பாதுகாப்பதற்காக இராணுவத்தினர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் லேஸ் கேஸில் உள்ள விமான நிலையத்தில் உதவி பொருட்களை பாரவூர்தியில் ஏற்றிய சந்தர்ப்பத்தில் மக்கள் ஒன்று கூடியமையை அடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதன்போது இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.