நிலவில் லேண்டறின் தொடர்பை ஏற்படுத்த 14 நாட்களுக்குள் முயற்சி – இந்த 14 நாட்கள் எதற்கு?

chandrayaan23 1568090069
chandrayaan23 1568090069

லேண்டறின் தொடர்பைப் பெற 14 நாட்களுக்குள் முயற்சிப்போம் என இஸ்ரோ கூறியதும், ஏன் 14 நாட்கள் என கேள்வி எழுந்துள்ளது.

நிலவின் தென்துருவத்தில் தண்ணீர், தாதுக்கள், கனிமங்கள் ஆகியவை குறித்து கண்டறிய சந்திரயான் 2 என்ற விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.

இந்த விண்கலம் ஆர்பிட்டர், விக்ரம்(லேண்டர்), ரோவர் ஆகிய 3 அமைப்புகளை கொண்டது.

சந்திரயான் 2 நிலவை நெருங்கியதும் கடந்த 2 ஆம் திகதி ஆர்பிட்டரில் இருந்து லேண்டரும், அதில் உள்ள ரோவரும் தனியாக பிரிந்தது.

சந்திரனில் இருந்து 35 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றிக் கொண்டிருந்த லேண்டரை கடந்த 7ஆம் திகதி அதிகாலை 1.54 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க விஞ்ஞானிகள் முயற்சித்தனர்.

ஆனால் நிலவில் தரையிறங்குவதற்கு 2 நிமிடங்களுக்கு முன்னர் லேண்டரில் இருந்து சிக்னல்கள் துண்டிக்கப்பட்டதனால் லேண்டர் தரையிறங்கியதா? இல்லையா எனத் தெரியவில்லை.

இந்த நிலையில் ஆர்பிட்டர் லேண்டர் இருக்கும் இடத்தை படம் பிடித்து அனுப்பியுள்ளது.

இதனால் லேண்டர், ரோவரில் உள்ள ஏதேனும் ஒரு உறுப்பை இயக்க இன்னும் 14 நாட்களுக்குள் முயற்சிப்போம் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியிருந்தார்.

அதென்ன 14 நாட்கள் கெடு என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.

அதாவது, நிலவில் 14 நாட்கள் இரவும் 14 நாட்கள் பகலாகவும் இருக்கும். இதை நாம் பூமியில் அமாவாசை, பௌர்ணமி என சொல்வோம். எனவே லேண்டரை பகல் பொழுதிலேயே கண்டறிந்துவிட இஸ்ரோ தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அங்கு ஒரு வேளை இரவு பொழுது வந்துவிட்டால் வெப்பநிலை -170 டிகிரி வரை இருக்கும். கடுமையான குளிர் காரணமாக லேண்டர் உறைந்துவிடும். எனவே பகல் பொழுதிலேயே தேடி முடிக்க விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்து வருகின்றனர் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.