ஜப்பான் பிரதமர் பதவி விலக தீர்மானம்!

120361923 gettyimages 1234861901
120361923 gettyimages 1234861901

ஜப்பான் பிரதமர் யுஷிஹிடி சுகா இந்த மாத இறுதியில் இடம்பெறவுள்ள லிபரல் ஜனநாயக கட்சியின் தலைமை பதவிக்கான போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று அந்த நாட்டு ஊடகமொன்றை மேற்கோள்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஜப்பான் போராடி வருகின்றது.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் ஸின்ஸோ அபேயின்  பதவி விலகலை அடுத்து, யுஷிஹிடி சுகா புதிய பிரதமராக பதவியேற்றார்.

ஜப்பானில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், புதிய பிரதமருக்கான ஆதரவு 30 சதவீதமளவில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.