லொஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை!

Amazon Rainforest Fires A
Amazon Rainforest Fires A

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த பணிகளில் உலங்கு வானூர்திகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக 5 ஏக்கர் அளவிலான வனப் பகுதியிலேயே தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.

எனினும், சில மணித்தியாலங்களில் மிக வேகமாக 400 ஏக்கர் அளவிலான வனப்பகுதியில் தீப்பரவலடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இரண்டு தீயணைப்பு வீரர்களும் குறித்த பணிகளின் போது காயடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.