ஆப்கானிஸ்தானின் பஞ்சீர் வெளியில் 20 பொதுமக்கள் படுகொலை!

5639
5639

ஆப்கானிஸ்தானின் பஞ்சீர் வெளியில் 20 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்தவர்களுக்கும், தாலிபான்களின் எதிர்ப்பு படையினருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்ற போதிலும், அவர்கள் தாலிபான்களால் கொல்லப்பட்டதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், பஞ்சீர் வெளியில் தாலிபான்களுக்கு எதிராக செயற்பட்டுவரும் கிளர்ச்சி படையினருக்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரும் தாலிபான்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அவர், தாலிபான்களின் கிளர்ச்சி படையினருக்கு உதவியதாக ஆதாரங்கள் இல்லை என்ற போதிலும், கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளனர்..

இதேவேளை, தாலிபான்களில் ஆட்சியை விரும்பாத ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் தொடர்ந்தும் அங்கிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பொதுமக்கள் பாகிஸ்தானின் எல்லையில் கூடியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.