சீனாவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி!

172593 covid vaccine 1
172593 covid vaccine 1

ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

அதாவது சீனாவின் மக்கள் தொகையில் 70 சதவீதத்தினருக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார ஆணைக்குழுவின் பேச்சாளர் மி பெங் , இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 2.16 பில்லியன் மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதுடன், 1.01 பில்லியன் பேருக்கு இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேநேரம், சீனாவின் தென்கிழக்கு மாகாணத்தின் புஜிஹான் பகுதியில் தற்போது டெல்டா வைரஸ் பரவல் அதிகரித்து வருகின்றது.

200 பேர் வரையில் அங்கு தற்போது கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், அவர்களில் அதிகமானோர் சிறுவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.