இந்தியா – சீனாவுக்கிடையில் உத்தியோகப்பூர்வ பேச்சுவார்த்தை!

670058 india china flags
670058 india china flags

எல்லைப் பிராந்தியத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும், சீன வெளிவிவகார அமைச்சர் வேங் ஹி இற்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.

தஜிகிஸ்தானின் துஷன்பேயில் இடம்பெறும் ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு இணையாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இருதரப்பு இராணுவ மற்றும் இராஜதந்திர அதிகாரிகள் மீண்டும் சந்தித்து எஞ்சியுள்ள பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பது குறித்து கலந்துரையாட வேண்டும் என இருவரும் இதன்போது இணங்கியதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.