அவுஸ்திரேலியா – அமெரிக்கா ஆகிய நாடுகள் உண்மைக்கு புறம்பான விடயங்களை தெரிவிப்பதாக பிரான்ஸ் குற்றச்சாட்டு

download 18
download 18

அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் உண்மைக்கு புறம்பான விடயங்களை கூறுவதாக பிரான்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஒப்பந்த விடயத்தில் இரட்டை தன்மை, அவமதிப்பு மற்றும் விடயத்தினை மீறி செயற்படுதல் என்பன இடம்பெற்றுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவுகஸ் (Aukus) என அழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்தின் ஊடாக அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்கும் தொழில்நுட்பம் அவுஸ்ரேலியாவுக்கு வழங்கப்படும்.

இந்த நடவடிக்கையானது அவுஸ்திரேலியாவுடன் பிரான்ஸ் கைச்சாத்திட்டுள்ள பல பில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தை ரத்தாக்கியுள்ளது.

பிரித்தானியாவை உள்ளிடக்கிய குறித்த அவுகஸ் ஒப்பந்தமானது சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் முயற்சியாக கருதப்படுகின்றது.

இந்தநிலையில் அமெரிக்காவிலுள்ள தூதுவரை மீள அழைப்பது தொடர்பில் ஆலோசிக்கப்படுவதாக பிரான்ஸ் வெளியுறத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.