மீள்குடியேற்றும் ஏதிலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க ஜோ பைடன் தீர்மானம்

Joe biden USA 23062020
Joe biden USA 23062020

அமெரிக்காவின் அடுத்த நிதியாண்டில் மீள் குடியேற்றும் ஏதிலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக்காலத்தில் ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவதற்கான திட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில், உலகளாவிய இடம்பெயர்வு, மனிதாபிமான நெருக்கடிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் குறித்த திட்டம் மீள செயற்படுத்தப்படவுள்ளதாக வெள்ளை மாளிகை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகும் அடுத்த நிதியாண்டில் ஏதிலிகளின் எண்ணிக்கையை 62, 500 இலிருந்து ஒரு இலட்சத்து 25 ஆயிரமாக அதிகரிக்கப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், தலிபான்கள் ஆட்சி காரணமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியவர்களும் அமெரிக்காவில் குடியேற்றப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது