மாமியார் இன்னொரு தாய் என நிரூபித்த மருமகள்; நெகிழ்ச்சி சம்பவம்

625.0.560.350.160.300.053.800.668.160.90 1 1
625.0.560.350.160.300.053.800.668.160.90 1 1

தமிழகத்தில் 87 வயது மாமியாரை மருமகள் தூக்கி வந்து வாக்களிக்க வைத்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சென்னை, பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட சென்னீர்குப்பம் ஊராட்சி ஏரிகரை தெருவைச் சேர்ந்தவர் பாப்பம்மாள்(87). இவருக்கு பாண்டியம்மா என்ற மருமகள் உள்ளார்.

மிகவும் வயதான பாப்பம்மாள், உள்ளாட்சி தேர்தலில் நான் வாக்களிக்க வேண்டும் என்று தன்னுடைய ஆசையை மருமகளிடம் கூறியுள்ளார்.

ஆனால் பாண்டியம்மாளோ, பார்வை சரியாக தெரியவில்லை, நடந்து செல்ல முடியாத நிலையில் எப்படி வாக்களிக்க முடியும் என பாண்டியம்மா கேட்டுள்ளார்.

ஆனால் தான் வாக்களித்தே தீரவேண்டும் என பாப்பம்மாள் கூறியதால் சற்றும் யோசிக்காமல் பாப்பம்மாளை ஆட்டோவில் அழைத்து வந்த பாண்டியம்மாள், அவரை வாக்குச்சாவடி மையத்திற்குள் அழைத்து செல்ல வீல் சேர் இல்லாததால் சற்றும் யோசிக்காமல் மாமியாரை கையில் தூக்கிச்சென்று வாக்களிக்க செய்தார்.

இந்தச் சம்பவத்தை பார்த்த வாக்காளர்கள் மற்றும் பொலிசார் நெகிழ்ச்சி அடைந்தனர். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.