சோமாலியாவில் குண்டு வெடிப்பு, 76 பேர் பலி

2 oad
2 oad

சோமாலியாவின் தலைநகர் மொகடீசில் இன்று காலை இடம்பெற்ற பாரிய குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 76 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலைநகருக்குள் நுழையும் பிரதான சோதனைச் சாவடியில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

மக்கள் நடமாட்டம் அதிகரித்த நேரமான காலை வேளையில் இந்த குண்டு இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதில் உயிரிழந்தவர்களில் பொலிஸ் அதிகாரிகளும், பல்கலைக்கழக மாணவர்களும் அதிகம் என அந்நாட்டு அரச தகவலொன்று கூறியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த போராட்ட அமைப்புக்களும் பொறுப்பேற்க வில்லையெனவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இருப்பினும், அல்கெய்தாவுடன் தொடர்புடைய அல் சபாப் அமைப்பு தொடர்ந்தேர்ச்சியாக அந்நாட்டில் அரச நிறுவனங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடாத்தி வருவதாகவும் அந்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

சோமாலியா குடியரசு  கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடமேற்கே ஜிபூட்டி, தென்மேற்கே கென்யா, வடக்கே யெமனுடன் இணைந்த ஏடன் வளைகுடா, கிழக்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே எதியோப்பியா ஆகியன அமைந்துள்ளன. சோமாலியா ஆப்பிரிக்கா கண்டத்தின் மிக நீண்ட கடற்கரையை கொண்ட நாடு என்பது குறிப்பிடத்தக்கது.