அமெரிக்காவில் 9/11 தீவிரவாத தாக்குதலின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று

9 11 attack
9 11 attack

அமெரிக்காவில் சுமார் 3,000 உயிர்களை பலி வாங்கிய 9/11 தீவிரவாத தாக்குதலின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று நினைவு கூறப்படுகிறது. இதே நாளில்தான் அமெரிக்க நேரப்படி சரியாக காலை 8.45 மணிக்கு நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மைய கட்டடத்தின் வடக்கு டவர் பகுதியில் கடத்தப்பட்ட விமானம் ஒன்று மோதியது .

உலகத்தின் போக்கையே மாற்றி அமைத்த அச்சம்பவத்தின் பிறகு உலகெங்கும் பல அமைப்புகள் தடை செய்யப்பட்டன. இந்த 9/11 தாக்குதலின் விளைவாக ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினரின் போர் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் போர் மற்றும் தீவிரவாத தாக்குதலில் பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் பெருநிலப்பரப்பில் மோசமான தீவிரவாத தாக்குதலின் தொடக்கத்திற்கான அறிவிப்பாக இந்த சம்பவம் நடைபெற்றது.

மேலும் பாலி தீவு முதல் பிரஸெல்ஸ் வரை பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட இந்த தாக்குதல் முக்கியமாக அமைந்தது.