இந்தியாவில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்

vikatan 2021 05 cbaa163c a154 4281 962e 903b3a7a30d0 corona virus
vikatan 2021 05 cbaa163c a154 4281 962e 903b3a7a30d0 corona virus

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 17 ஆயிரத்து 04 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 40 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 33 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேநேரம் 2 இலட்சத்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும் 378 பேர் நேற்று ஒரேநாளில் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 51 ஆயிரத்தைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.