பங்களாதேஷில் இந்து கோவில்கள் மீதான வன்முறை தாக்குதல்களில் 4 பேர் பலி

Government of Bangladesh take action to protect Hindus .... Suppress jihadists .... Vishwa Hindu Parishad in action ... 36 2
Government of Bangladesh take action to protect Hindus .... Suppress jihadists .... Vishwa Hindu Parishad in action ... 36 2

பங்களாதேஷிலுள்ள இந்துக் கோவில்கள் மீது நேற்று (14) நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 4 பேர் பலியானதுடன் 22 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தையடுத்து, வன்முறைக்குக் காரணமானவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷில் கொமில்லா இந்து கோவிலில் நேற்று துர்கா பூஜை நடைபெற்றவேளையில் இனந்தெரியாத குழுவொன்று அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

அதேபோல் கொமில்லா நகருக்கு அருகே உள்ள சந்த்பூரின் ஹாஜிகன்ஜ், சட்டோகிராமின் பன்ஷ்கலி, காக்ஸ் பஜாரின் பெகுலா ஆகிய நகரங்களில் உள்ள இந்து கோவில்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதையடுத்து நான்கு நகரங்களில் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மோதல்களை கட்டுப்படுத்த எல்லை பாதுகாப்பு படை பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பாதுகாப்பு படையினர் மீதும் வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியதில் அங்குபெரும் பதற்றம் ஏற்பட்டது.

சமூக ஊடகங்களில் பரவிய தவறான தகவலே இந்த கலவரம் ஏற்பட காரணம் என்பது ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து மேலும் அசம்பாவிதங்கள் இடம்பெறாமல் தடுக்க 22 மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.