ஆப்கான் பள்ளிவாசலில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 32 பேர் பலி!

blast 2
blast 2

ஆப்கானிஸ்தான், கந்தஹார் நகரில் உள்ள பள்ளிவாசலொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 32 பேர் பலியானதுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கான இந்தப் பள்ளிவாசலில் இன்று (15) வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்த வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, குறித்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமையும் ஆப்கானிஸ்தானின், குந்துஸ் பகுதியில் உள்ள பள்ளிவாசலொன்றில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இந்தத் தாக்குதலை ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றதுடன், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறியதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பாரதூரமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.