43,000 தவறான பரிசோதனை முடிவுகளை வழங்கிய கொவிட் பரிசோதனை மையம்!

corona world4720 1597663078
corona world4720 1597663078

மத்திய இங்கிலாந்தில் உள்ள தனியார் கொவிட் பரிசோதனை மையமொன்றிலிருந்து மக்களுக்கு தவறான கொவிட் பரிசோதனை முடிவுகள் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒக்டோபர் 12 ஆம் திகதி வரை இந்த மையத்தினால் 43,000 பேருக்கு தவறான கொவிட் பரிசோதனை முடிவுகள் வழங்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

அதனால் குறித்த மையத்தில் கொவிட் பரிசோதனைகளை மேற்கொண்டவர்கள் மீண்டும் கொவிட் பரிசோதனையொன்றை மேற்கொள்ளுமாறு அந்நாட்டு அரசாங்கம் கோரியுள்ளது.

தவறான கொவிட் பரிசோதனை முடிவுகளால் கொவிட் பரவல் அதிகரிக்ககும் வாய்ப்புள்ளதால், அரசாங்கத்தினால் குறித்த பரிசோதனை மையம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இவ்வாறான தவறான பரிசோதனை முடிவுகளை வழங்கியதற்கான காரணம் தொடர்பிலும் குறித்த தனியார் பரிசோதனை மையத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.