சர்வதேச விண்வெளி நிலையத்தில் திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்ட மூவரும் பூமிக்கு திரும்பினர்

1634459120 8760544 hirunews
1634459120 8760544 hirunews

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 12 நாட்களாக திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ரஷ்ய நடிகையும், அதை இயக்குபவரும் இன்று (17) பூமிக்கு திரும்பியுள்ளனர்.

அண்ட வெளியில் முதலாவது திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் என்ற சாதனையுடன் அவர்கள் பூமிக்கு திரும்பியுள்ளதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த 6 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல்வேறு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விண்வெளி வீரர் ஒலேக் நொவிற்ஸ்கி இவர்களை பாதுகாப்பாக பூமிக்கு மீள அழைத்து வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.