பாகிஸ்தானில் வீடொன்றில் தீப்பரவல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி!

1633657669 Fire breaks 2
1633657669 Fire breaks 2

பாகிஸ்தானில் அலி புர் பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்த தீப்பரவலிலிருந்து குறித்த வீட்டில் இருந்த எவரும் உயிர் தப்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.