கேரளாவில் தொடரும் மழையுடனான வானிலை : பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு

media handler
media handler

கேரள மாநிலத்தில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் பலர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் அங்கு தொடர்ந்தும் கடும் மழையுடனான வானிலை நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கேரளாவின் கோட்டயம் பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதோடு அதில் பலர் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் இராணுவத்தினரும், மீட்பு பணியாளர்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.