அமெரிக்காவின் முதலாவது கறுப்பின இராஜாங்க செயலாளர் கொலின் பவல் உயிரிழப்பு!

download 32
download 32

அமெரிக்காவின் முதலாவது கறுப்பின இராஜாங்க செயலாளர் ஜெனரல் கொலின் பவல், கொவிட் தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளதாக சிஎன்என் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

கொலின் பவல் சிரேஷ்ட அரசியல்வாதியும், இராணுவ தலைவருமாவார். அவர் கொவிட்-19 தடுப்பூசியை பெற்றிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகழ்மிக்க இராணுவ அதிகாரியான பவெல், வியட்னாம் இராணுவத்துக்காக பணியாற்றியதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரேகனின் இறுதி ஆட்சிக்காலத்தில் முதலாவது கறுப்பின பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

அவ்வாறே 90களின் மத்திய காலப்பகுதியில் அமெரிக்காவில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட முதலாவது கறுப்பினத்தவராகவும் அவர் கருதப்படுகிறார்.

அத்துடன், ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் ஆட்சிகாலத்தில், முன்னாள் இராணுவ உயர் அதிகாரியான கொலின் பவல் 2000 ஆம் ஆண்டு அமெரிக்காவின் இராஜாங்க செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அமெரிக்க வெளியுறவு கொள்கை உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்த பவல், அந்நாட்டு அரசாங்கத்தில் உயர் பதவியை வகித்த முதல் கறுப்பினத்தவராகவும் கருதப்படுகிறார்.