கிரீஸில் 6.4 மெக்னிடியூட் அளவில் பாரிய நில அதிர்வு

1626743854 earthquake 2
1626743854 earthquake 2

கிரீஸ் கடற்பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பாரிய நிலஅதிர்வு சுமார் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கிரீஸின், கர்பத்தோஸ் நகரில் இருந்து 149 கி.மீ. தொலைவில் மத்திய தரைக்கடல் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.0 முதல் 6.4 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாக கிழக்கு ஐரோப்பிய – மத்திய தரைகடல் நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விபரங்கள் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை எனினும், துருக்கி, எகிப்து, சிரியா, லெபனான் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கும் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.