சீனாவில் சிறுவர்கள் தவறு புரிந்தால் பெற்றோருக்கு தண்டனை!

202001220852071488 Outbreak from new virus rises to 440 in China with 9 dead SECVPF
202001220852071488 Outbreak from new virus rises to 440 in China with 9 dead SECVPF

சிறுவர்களின் தவறான நடத்தை அல்லது குற்ற செயல்களுக்காக, பெற்றோருக்கு தண்டனை வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவர சீன நாடாளுமன்றம் பரிசீலித்து வருகிறது.

சீனாவில் குடும்பக் கல்வி ஊக்குவிப்புச் சட்டம் என்ற வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

அதில், சிறுவர்களின் தவறான நடத்தைகளுக்கு பெற்றோரை பொறுப்பாக்குவதுடன் குழந்தை வளர்ப்பு பற்றிய வகுப்புகளுக்கும் அவர்கள் அனுப்பி வைக்கப்படுவர்.

பெற்றோர் மட்டுமல்லாமல் சிறுவர்களின் பாதுகாவலருக்கும் இச்சட்டம் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் நாடாளுமன்ற நிலைக்குழு இந்தச் சட்ட முன்வடிவை ஆய்வுசெய்ய உள்ளது.

பெற்றோர் சிறுவர்களிடம் நேரத்தை செலவிட வேண்டும், விளையாட வேண்டும், உடற்பயிற்சி செய்தல் உள்ளிட்ட நற்செயல்களில் ஈடுபட வேண்டும் என்றும் இந்தச் சட்டம் பரிந்துரைக்கிறது.

வார இறுதி நாட்களான வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே இணைய விளையாட்டுக்களை சிறுவர்கள் விளையாட வேண்டும் என்று சமீபத்தில்தான் சீன கல்வித்துறை அமைச்சகம் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது.

அதேபோல், வீட்டுப்பாடங்கள் மற்றும் வார இறுதி நாட்கள், விடுமுறை தினங்களில் பள்ளி முடிந்த பிறகு பயிற்சி வகுப்புகள் நடத்தவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

மாணவர்களின் கல்விச்சுமையை குறைக்கும் வகையில் சீன அரசு இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்திருந்தது.