ஹெய்ட்டியில் கடத்தப்பட்ட கத்தோலிக்க மத செயற்பாட்டாளர்களை மீட்க அமெரிக்காவின் சிறப்புக்குழு வருகை

201611171135248266 Roman Catholic Church SECVPF
201611171135248266 Roman Catholic Church SECVPF

ஹெய்ட்டியின் தலைநகரில் நிலைக்கொண்டிருந்த கடத்தப்பட்ட கத்தோலிக்க மத செயற்பாட்டாளர்களை கண்டறிவதற்கான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அவர்களை மீட்பதற்காக அமெரிக்காவின் சிறப்பு பாதுகாப்பு குழுவொன்றும் ஹெய்ட்டியை சென்றடைந்துள்ளதாக ‘நியுயோர்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

ஹெய்ட்டியின் தலைநகரில் நிலைக்கொண்டிருந்த கத்தோலிக்க மத செயற்பாட்டாளர்களான அமெரிக்க மற்றும் கனடா ஆகிய நாடுகளில் 17 பிரஜைகள் கடந்த சனிக்கிழமை கடத்தப்பட்டிருந்தனர்.

அவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், இந்த கடத்தல் சம்பவம் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக ஹெய்ட்டி காவல்துறையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹெய்ட்டியின் ஜனாதிபதி ஜோவினல் மொய்ஸ் கொலை செய்யப்பட்டமை மற்றும் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட உயிர்களை காவுக்கொண்ட ஒகஸ்ட் மாத நில அதிர்விற்கு பின்னர் அங்கு வன்முறைச் சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.